அயோத்தி ராமர் கோயில் திறப்பு தினத்தில் இறைச்சி விற்க தடை: மாநில அரசு உத்தரவு..!

Mahendran
சனி, 20 ஜனவரி 2024 (10:29 IST)
அயோத்தியில் நாளை மறுநாள் அதாவது ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளதை அடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
அயோத்தியில் 500 ஆண்டு காலமாக சட்ட போராட்டம் நடத்தப்பட்டு வந்த அயோத்தி ராமர் கோவில் விவகாரம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு காரணமாக முடிவுக்கு வந்தது என்பதும் இதனை அடுத்து அங்கு ராமர் கோவில் காட்டும் வேலைகள் நடந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில் அதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா  மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். நாடு முழுவதும் இருந்து ஏராளமான திரை உலக பிரபலங்கள் தொழிலதிபர்கள் இதில் கலந்துகொள்ள உள்ளனர் 
 
இந்த நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக மத்திய மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது என்பதும் பங்குச்சந்தையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ஜனவரி 22ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இறைச்சி கடைகளை மூட மாநில அரசு உத்தரவு பெற்றுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்