மறுபடியும் துணை முதல்வரா அஜித் பவார்? இது நம்ம லிஸ்டலயே இல்லையே!

Webdunia
வெள்ளி, 29 நவம்பர் 2019 (10:47 IST)
மகாராஷ்டிரத்தில் முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றுள்ள நிலையில் மீண்டும் அஜித்பவார் துணை முதல்வராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மகாராஷ்டிராவில் நடந்த அரசியல் குளறுபடிகள் மொத்த இந்தியாவையுமே மகாராஷ்டிரா பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. சிவசேனா கூட்டணியிலிருந்து திடீரென கட்சி தாவி பாஜகவுடன் இணைந்தார் தேசியவாத காங்கிரஸ் அஜித்பவார். பாஜகவின் பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்க, துணை முதல்வராக அஜித்பவார் பதவியேற்றார்.

அஜித்பவார் பதவியேற்றதும் அவர் மேல் நிலுவையில் இருந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. நான்கு நாட்கள் நிலைக்காத கூட்டணியில் திடீரென்று துணை முதல்வர் பதவியிலிருந்து அஜித்பவார் ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து பட்னாவிஸும் பதவி விலகினார்.

இதனால் எந்த சச்சரவுமின்றி சிவசேனா கூட்டணி மராட்டியத்தில் ஆட்சியமைத்துள்ளது. நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மீண்டும் தேசியவாத காங்கிரஸில் இணைந்த அஜித்பவாருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் உத்தவ் தாக்கரே அரசு மீதான் நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்புக்கு பிறகு அஜித்பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாமென அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்