டெல்லியில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் அமைச்சர்கள், எம்.பிக்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பொருளாதார மந்தநிலை நிலவுவது குறித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன் பொருளாதார மந்தநிலை ஏற்படவில்லை என்றும், வளர்ச்சி விகிதம் மட்டுமே குறைந்திருப்பதாகவும் விளக்கம் அளித்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மத்திய திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே மற்றும் அமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர் தூங்கி வழிந்து கொண்டிருந்தது கேமராவில் பதிவாகியுள்ளது.