திருமணம் முடிந்தவுடன் சகதியில் புரண்ட மணமக்கள்: அதிர்ச்சியில் உறவினர்கள்

Webdunia
வெள்ளி, 22 நவம்பர் 2019 (23:07 IST)
ஒவ்வொருவர் தங்கள் வாழ்நாளில் ஒரே ஒரு முறைதான் திருமணம் நடைபெறும் என்பதால் அந்தத் திருமணத்தை கடைசிவரை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக விதவிதமான புகைப்படங்கள் வீடியோக்கள் எடுப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது
 
இந்த நிலையில் கேரளாவில் திருமணம் முடிந்த ஒரு தம்பதியினர் வித்தியாசமான புகைப்படம் எடுப்பதாக கூறி கொண்டு விவசாய நிலத்தில் உள்ள சகதியில் உருண்டு புரண்டு புகைப்படம் எடுத்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது
 
ஒரு சில வெளிநாடுகளில் திருமண ஜோடியினர் இதுபோன்ற சகதியில் புரண்டு வித்யாசமான புகைப்படங்கள் எடுப்பது வழக்கமாக இருக்கின்றது. அந்த வகையில் இந்தியாவில் முதன் முதலாக இந்த டிரண்டை இந்த ஜோடி அறிமுகப்படுத்தியுள்ளது
 
விவசாய நிலத்தில் உழுது நாத்து நட தயாராக வைத்திருந்த நிலத்தில் இவர்கள் இருவரும் உருண்டு பிரண்டு கட்டிப்பிடித்துக்கொண்டு எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன
 
இந்த புகைப்படங்கள் வித்தியாசமாக இருந்தாலும் இது குறித்து விவசாயிகளின் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். விவசாயம் செய்ய நிலத்தை தாங்கள் கடவுளுக்கு சமமாக மதிப்பதாகவும், அந்த நிலத்தில் உருண்டு பிரண்டு ரொமான்ஸ் செய்வதை தாங்கள் கண்டிப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்
 
வெளிநாட்டிற்கு வேண்டுமானால் இது வித்யாசமான புகைப்படங்களாக இருக்கலாம் ஆனால் விவசாயத்தை தெய்வம் போல் மதிப்பு வரும் எங்களை பொருத்தவரை இது நெருடலாக இருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்