நடிகை சமந்தா கர்ப்பமா? டெலிவரி தேதியை அறிவித்ததால் பரபரப்பு!

புதன், 20 நவம்பர் 2019 (17:07 IST)
பிரபல நடிகை சமந்தா, தனது டெலிவரி தேதியை அறிவித்து அந்த தேதியில் தனது குழந்தை இவ்வுலகை எட்டிப்பார்க்கும் என கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
நடிகை சமந்தா, நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்த பின்னர் தொடர்ந்து நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் திருமணத்திற்கு பின்னரும் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வரும் நாயகியாக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமந்தா தன்னிடம் சமூக வலைத்தள பயனாளிகளும் நிருபர்களும் தொடர்ந்து குழந்தை எப்போது? என்ற கேள்வியை கேட்டு வருவதாகவும் இதனையடுத்து தனக்கு வரும் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலை 7 மணிக்கு எனக்கு குழந்தை பிறக்கும்’ என்றும் கிண்டலுடன் கூறியுள்ளார். அவரது பதிலில் உள்ள நகைச்சுவையை அவரது ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
 
நடிகை சமந்தா தற்போது ‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து அவர் புதிய படங்களை ஒப்புக்கொள்ள மறுப்பதால் ஒருவேளை உண்மையிலேயே 2022ஆம் ஆண்டு குழந்தை பெற்றுக்கொள்ள அவர் முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்