கொரோனா காலத்தில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (12:26 IST)
கொரோனா காலத்தில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் நடந்ததாக பள்ளிக் கல்வித் துறையின் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா முதல் அலை, இரண்டாவது அலையின்போது ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டது. இந்த நேரத்தில் ஏராளமான மாணவர்கள் குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு சென்று விட்டதாகவும், மாணவிகளைப் பொறுத்த வரை திருமணம் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது
 
இதுகுறித்து பள்ளி கல்வித்துறை ஆய்வு செய்ததில் காலத்தில் மட்டும் 511 மாணவிகளுக்கு திருமணம் செய்யப்பட்டு இருப்பதை கண்டறிந்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது அந்த மாணவிகளை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை திருமணங்கள் குறைவாக இருந்தாலும் கொரோனா காலத்தில் வேறு வழியில்லாமல் பெற்றோர்கள் 18 வயதுக்கு கீழ் இருக்கும் தங்களது மகள்களுக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்