இந்தியன் 2 அப்டேட்டை சூசகமாக கொடுத்த இயக்குனர் ஷங்கர்!

புதன், 8 ஜூன் 2022 (11:39 IST)
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் 2 திரைப்படம் கடந்த சில ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் இன்னும் தொடங்கப்படவில்லை. இது சம்மந்தமாக நீதிமன்ற வழக்குகள் வரை சென்று பிரச்சனை இப்போது சுமூக நிலையை எட்டியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்துள்ளது. கிட்டத்தட்ட 200 கோடி ரூபாயை இதுவரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை உறுதிப்படுத்துவது போல இப்போது இயக்குனர் ஷங்கர் டிவிட்டரில் தன்னுடைய முகப்புப் படமாக இந்தியன் 2 போஸ்டரை மாற்றியுள்ளார். இது கமல் மற்றும் இந்தியன் 2 ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்