மசூதிகளில் பெண்கள் தொழுகை நடத்த தீர்ப்பளிக்குமா உச்சநீதிமன்றம்? மார்கண்டேய கட்ஜூ கேள்வி

Webdunia
ஞாயிறு, 30 செப்டம்பர் 2018 (16:56 IST)
சபரிமலையில் அனைத்து பெண்களும் வழிபாடு நடத்தலாம் என தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம் மசூதிகளில் பெண்கள் தொழுகை நடத்த தீர்ப்பளிக்குமா என முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்க மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.
 
இவ்வழக்கை தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். மற்ற 3 நீதிபதிகளின் தீர்ப்பும் தீபக் மிஸ்ரா தீர்ப்புடன் ஒத்திருந்ததால் அனைத்து வயது பெண்களும் சபரிமைலைக்கு செல்லலாம் என இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ, இந்துக்களின் வழிபாட்டு முறைகளில் தலையிட்டுள்ள நீதிமன்றம், மசூதிகளில் பெண்களும் தொழுகை நடத்தலாம் என தீர்ப்பு வழங்குமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்