போலீஸ் அதிகாரி மீது காரை ஏற்றிய நபர் கைது!

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (14:51 IST)
பெங்களூரில் ஐபிஎஸ் அதிகாரி மீது கார் ஏற்றிய நபரைக் கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள குருகுண்டபால்யா என்ற பகுதியில் இன்று கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது,  அந்த அமைப்பைச் சேர்ந்த கிரிஷ் கவுடா, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஐபிஎஸ் அதிகாரி மீது காரை ஏற்றிச் சென்றார். அவரைப் பிடித்த போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஐபிஎஸ் அதிகாரி மீது காரை ஏற்றிக் கொல்ல முயன்ற சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்