கன்னன் தேவன் டீ குடி.. மும்பை இந்தியன்ஸ் பொடி பொடி! – ட்ரெண்டாகும் பெங்களூர் வெற்றி!

திங்கள், 27 செப்டம்பர் 2021 (10:36 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி வென்று தரவரிசையில் நீடிப்பது ட்ரெண்டாகி வருகிறது.

அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் நேற்றைய இரண்டாவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொண்டன.

முதலாவதாக பேட்டிங் செய்த ஆர்சிபி சிறப்பாக விளையாடி 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை ஸ்கோர் செய்தது. அடுத்ததாக களமிறங்கிய மும்பை அணியால் ஆர்சிபியின் ஃபீல்டிங்கை சமாளிக்க முடியாமல் திணறியது. 18 ஓவர்களே முடிந்திருந்த நிலையில் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்.

நீண்ட நாள் கழித்து ராயல் சேலஞ்சர்ஸ் அணி நல்ல நிலையில் விளையாடுவது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளதுடன் கம்பேக் ராயல் சேலஞ்சர்ஸ் என ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்