எல்ஐசியின் பணம் சில பாஜக தலைவர்களின் நலனுக்கு பயன்படுகிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பாலாஜி பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இந்த பட்ஜெட் குறித்து தனது கருத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
எல்ஐசியின் பணம் மக்களின் பணம் என்றும் ஆனால் அந்த பணம் தற்போது பாஜகவில் உள்ள சில தலைவர்கள் பலனடைந்து வருவதாகவும் அவர் குற்றச்சாட்டியுள்ளார்.
பட்ஜெட்டிற்கு பின் பங்குச்சந்தை பெரிய வீழ்ச்சி அடைந்துள்ளது என்றும் ஆயிரக்கணக்கான கோடி தொகையை முதலீடு செய்யுமாறு மத்திய அரசு சில பிரபலங்களை தொலைபேசி வழியாக கேட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்
பொய்களால் நிறைந்தது தான் இந்த பட்ஜெட் என்றும் 2024 பொது தேர்தலை கணக்கில் கொண்டு இந்த பட்ஜெட்டை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்