ஜெயலலிதா பாணியில் அரசியல் காய்களை நகர்த்தும் மம்தா பானர்ஜி

Webdunia
செவ்வாய், 24 ஜூலை 2018 (08:15 IST)
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பாணியில் மாநிலத்தில் தேசிய கட்சிகளை வளரவிடக்கூடாது என்பதில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இருப்பதாக தெரிகிறது.
 
கடந்த 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக தீவிர முயற்சி எடுத்தும் அதிமுகவுடன் கூட்டணியில் இணைய முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் ஜெயலலிதா. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு தேசிய கட்சிகளையும் நாம் வளர்த்து விடக்கூடாது என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருந்தார். எனவே தனித்து போட்டியில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 37ஐ வென்று தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதை நிரூபித்தார்.
 
அதேபாணியில் தற்போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி செயல்படுகிறார். காங்கிரஸ் கட்சியுடன் பெரிய அளவில் கருத்துவேறுபாடு இல்லை என்றாலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவே மம்தா பானர்ஜி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள, 42 தொகுதிகளில் 34 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வென்றது. இந்த முறை அதைவிட அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் மம்தா. மேலும் அவருக்கு பிரதமர் பதவி மீதும் ஒரு கண் இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்