ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜக காலி - மம்தா பானர்ஜி

ஞாயிறு, 22 ஜூலை 2018 (11:51 IST)
ஜெயலலிதா இருந்திருந்தால் நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் அதிமுக பாஜகவுக்கு ஆதரவு அளித்திருக்காது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசை வீழ்த்த வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி வருகிறார். இதற்காக நாடு முழுவதும் எதிர்கட்சி தலைவர்கள் ஒன்றிணைக்கும் பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார். 
 
இந்நிலையில் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில், பாஜகவுக்கு எதிராக 126 ஓட்டுகளும், ஆதரவாக 325 ஓட்டுகளும் கிடைத்தன. அதிமுக எம்.பி.க்கள் அனைவரும் மத்திய அரசிற்கு ஆதரவாகவே வாக்களித்தனர்.
 
இந்நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி, அதிமுக மிக தவறான பாதையை தேர்ந்தெடுத்து விட்டது என்றும் ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால் பாஜகவிற்கு எதிராகவே வாக்களித்திருப்பார் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கான பின்னடைவை அதிமுக விரைவில் சந்திக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்