மோடியை சரமாரியாக கேள்வி கேட்ட ராகுலை பாராட்டிய சிவ சேனா!
ஞாயிறு, 22 ஜூலை 2018 (20:03 IST)
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஆக்ரோஷமாக பேசியதற்கு பாஜகவின் கூட்டணி கட்சியான சிவ சேனா ராகுல் காந்தியை பாராட்டியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஆக்ரோஷமாக பேசி அதிர வைத்தார்.
நாடு முழுவதும் மக்கள் மனதில் உள்ள கேள்விகளை ஒரு மக்கள் தலைவராக ராகுல் காந்தி பேசினார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் பாஜகவின் கூட்டணி கட்சியான சிவ சேனா காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பாராட்டியுள்ளது.
பிரான்ஸ் கால்பந்து அணியைப்போல் மோதி வெற்றி பெற்றாலும் குரேஷியாவை போன்று ராகுல் மக்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார் என்று பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான சிவ சேனாவின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரவுத் கூறியுள்ளார்.