பள்ளிகளில் சுதந்திர தினம் கொண்டாட வேண்டாம்; மம்தா அரசு அதிரடி உத்தரவு

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (17:12 IST)
பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் தொடர்பான மத்திய அரசு உத்தரவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


 

 
நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவை நாடு முழுவதும் அனைத்தும் பள்ளிகளிலும் கொண்டாடுவது வழக்கம். இதை முன்னிட்டு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இணை செயலாளர் மனீஷ் கார்க் சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
 
அதில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சங்கல்ப் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் சுதந்திர போராட்டம் குறித்து வினாடி வினா போட்டி, ஓவியப் போட்டி ஆகியவற்றை நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வினாடி வினா போட்டிக்கான கேள்விகளை நரேந்திர மோடி செயலில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதற்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை பின்பற்ற வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் அதில் கூறியபடி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்றும் மேற்கு வங்க மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்