அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவரில் ஒருவராகவும், சுதந்திரப்பாராட்ட வீரராகவும், இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி முன்னேற்றம் குறித்துப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவரும், நவீன இந்தியாவின் சிற்பி எனவும் அழைக்கப்பட்டவர் ஜவகர்லால் நேரு.
பாரத ரத்னா ஜவகர்லால் நேரு முதலாவது இந்திய பிரதமர் ஆவார். விடுதலை போராட்டத்தின் போதும், அதற்குப் பின்னரும், இந்திய தேசிய காங்கிரசில் இருந்தவர்களுள் மிதமான சோசலிசவாதிகளின் தலைவராகக் கருதப்பட்டவர்.
1947, ஆகஸ்ட் 15-ல் இந்தியா, பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது பிரதமராக பதவியேற்றார். 1964, மே 27-ல் காலமாகும் வரை அவரே இப்பதவியை வகித்து வந்தார்.