அப்படியே உங்க பக்தர்களையும் கூட்டிட்டு போங்க மோடி ஜீ! – மராட்டிய அமைச்சர் கிண்டல்!

Webdunia
செவ்வாய், 3 மார்ச் 2020 (12:30 IST)
ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலிருந்து பிரதமர் மோடி வெளியேறப்போவதாக அறிவித்திருந்த நிலையில் அவரது முடிவுக்கு வாழ்த்து கூறியுள்ளார் மராட்டிய அமைச்சர் ஒருவர்.

பிரதமராக பதவியேற்ற காலம் முதல் மக்களுக்கு தனது கருத்துகளை தெரிவிக்கவும், மக்கள் கருத்துகளை கேட்கவும் பிரதமர் மோடி டிவிட்டரில் தீவிரமாக இயங்கி வந்தார். இந்நிலையில் நேற்று ட்விட்டரில் பதிவிட்ட அவர் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் தான் வெளியேற யோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அவரது இந்த முடிவை மகாராஷ்டிர தேசியவாத காங்கிரஸ் அமைச்சர் நவாப் மாலிக் வரவேற்பது போல கிண்டலடித்துள்ளார். மோடியின் இந்த முடிவு குறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர் ”பிரதமர் மோடி சமூக வலைதளங்களிலிருந்து வெளியேற போவதாக நேற்று சூசகமாய் அறிவித்திருந்தார். அவரது அறிவிப்பை தொடர்ந்து மேலும் சில பாஜக தலைவர்களும் சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறுவதாக கூறி்யுள்ளனர். அவரது இந்த முடிவை பாராட்டுகிறேன். அப்படியே மோடியின் பக்தர்களும் சமூக வலைதளங்களை விட்டு வெளியேறிவிட்டால் நாடு அமைதியாக இருக்கும். மோடியின் இந்த முடிவு நாட்டு நலனுக்கானது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்