சிக்னலே கிடைக்கல.. கிடைக்கல..! – ராட்டினத்தில் ஏறிய அமைச்சர்!

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2021 (11:00 IST)
மத்திய பிரதேசத்தில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் அமைச்சர் ராட்டினம் மேல் ஏறி போன் பேசிய சம்பவம் வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துள்ள சூழலில் இன்னமும் நாட்டின் பல்வேறு கிராம மற்றும் வனப்பகுதிகளில் செல்போன் சிக்னல் கிடைக்காத கோளாறு இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தி மத்திய பிரதேச அமைச்சர் பிரஜேந்திர சிங் அரசு விழா ஒன்றிற்காக பிரடாப்கர் மாவட்டத்திலுள்ள அம்கோ கிராமத்திற்கு சென்றுள்ளார்.

அங்குள்ள மக்களிடன் குறைகளை விசாரித்த அவர் இது தொடர்பாக அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயன்றபோது சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் அங்கு அருகே இருந்தே உயரம் செல்லும் ராட்டினத்தில் ஏறி குறிப்பிட்ட உயரம் சென்றுள்ளார். பிறகு சிக்னல் கிடைக்கவே அதிகாரிகளை தொடர்புக் கொண்டு பேசியுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்