வெடி வைத்து கட்டிடம் தகர்ப்பு: கேரளாவை தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் அதிரடி

Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2020 (13:40 IST)
கேரளாவில் மரடு அடுக்குமாடி குடியிருப்பு தகர்க்கப்பட்டது போலவே மத்திய பிரதேசத்தில் ஒரு குடியிருப்பு தகர்க்கப்பட்டுள்ளது.

கேரளாவின் மரடு பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு மூன்று பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன. இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆனது.

இந்நிலையில் மத்திய பிரதேசம் இந்தூர் பகுதியில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த மூன்றடுக்கு கட்டிடத்தை மத்திய பிரதேச அரசு வெடி வைத்து தகர்த்துள்ளது. தொடர்ந்து விதிமுறைகளை மீறி அல்லது சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் தகர்க்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்