ரஜினி பேசிய பேச்சு... கடுப்பாகி போலீஸுக்கு போன திராவிடர் விடுதலை கழகம்!

Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2020 (13:28 IST)
ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஒட்டி நடந்த பேரணியில் இராமன், சீதை ஆகியோர் உருவங்களை நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்று ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய செய்தி வெளிவந்திருக்கிறது. 
 
தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வதந்தியைப் பரப்பி, பொது அமைதியைக் குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது அனைத்து காவல் நிலையங்களிலும் கழகத் தோழர்களும் பெரியாரியல் பற்றாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் உடனடியாக புகார் கொடுக்க வேண்டும் என கொளத்தூர் மணி அறிக்கையில் தெரிவித்திருந்தார். 
 
எனவே இதனைத்தொடர்ந்து, ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளிகப்பட்டுள்ளது. அம், பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ரஜினி அவதூறாக பேசியதாக திராவிடர் விடுதலை கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்