மக்கள் தொகை பதிவேடு: தவறான தகவல் அளித்தால் அபராதம்! – மத்திய அரசு எச்சரிக்கை!

வெள்ளி, 17 ஜனவரி 2020 (08:36 IST)
மக்கள் தொகை பதிவேட்டு படிவத்தில் தவறான தகவல்களை நிரப்பினால் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா முழுவது தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கு எடுக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டபோதே பரவலான சர்ச்சைகள் எழுந்தன. தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கும், மக்கள் தொகை பதிவேட்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கூறி விளக்கமளித்தது மத்திய அரசு.

மத்திய அரசு இந்த பதிவேடு கணக்கெடுப்பை ஏப்ரல் 1 முதல் தொடங்கி செப்டம்பர் 30 வரை நடத்தும் என கூறப்படுகிறது. மக்களிடையே எதிர்ப்புகள் இந்த கணக்கெடுப்புக்கு நிலவி வரும் சூழலில் யாராவது தவறான தகவல்களை பூர்த்தி செய்து கொடுத்தால் அவர்களுக்கு 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த கணக்கெடுப்பின் போது எந்த ஆவணங்களையும் காட்ட தேவையில்லை என்றும் ரேசன் கார்டு, ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட எண்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்