கார் மீது லாரி மோதி விபத்து: 10 பேர் பரிதாப பலி

Webdunia
வெள்ளி, 1 ஜூன் 2018 (09:25 IST)
மகாராஷ்டிராவில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் யவட்மால் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், பலியானவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த 3 பேரை மீட்ட போலீஸார், அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். போலீஸார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்