இந்நிலையில் அமலால் சமையல் செய்வதற்காக ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஸ்டவ் வெடித்து சிதறி அமலாவின் உடலில் தீப்பற்றியது. இதனால் அமலா அலறினார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் காயமடைந்த அமலாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த அமலா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.