எல்.ஐ.சி பங்கு விற்பனை; அரசுக்கு லாபம்! சரியும் பங்குசந்தை நிலவரம்!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (11:58 IST)
எல்.ஐ.சி பங்குகள் இன்று பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட நிலையில் பங்கு விற்பனை குறைந்து வருகிறது.

மத்திய அரசின் பொது காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியின் பங்குகள் பொதுமக்கள், ஊழியர்கள் மற்றும் பங்கு வர்த்தகத்தினருக்கு குறிப்பிட்ட வீதம் என ஒதுக்கி விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் அரசு ரூ.21 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

எல்.ஐ.சியின் பங்குகள் விற்கப்பட்ட நிலையில் இன்று முதன்முதலாக எல்.ஐ.சி பங்குகள் பங்குசந்தையில் பட்டியலிடப்பட்டன. காலை முதலாக பங்குசந்தை சென்செக்ஸ் புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளன. ஆனாலும் எல்.ஐ.சி பங்குகள் குறைந்து வருகின்றன. ரூ.918 தோராய தொகையாக தொடங்கிய பங்கு பட்டியலில் எல்.ஐ.சி பங்குகள் தற்போது ரூ.890 என்ற அளவில் ஏற்ற இறக்கங்களோடு வர்த்தகமாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்