போராடனுமா போராடிக்கோங்க... ஆனா ஒன்னும் மாறாது: அமித்ஷா அதிரடி!!

Webdunia
புதன், 22 ஜனவரி 2020 (12:47 IST)
குடியுரிமை திருத்த சட்டம் எக்காரணத்திற்காகவும் மாற்றப்படாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 
 
கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி நாடாளுமந்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் அண்டை நாடுகளில் இருந்து வந்த சிறுபான்மையினருக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வகை செய்கிறது.
 
பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து மதத் துன்புறுத்தல்களில் இருந்து தப்பி, 2014 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்னர் இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு CAA குடியுரிமை அளிக்கிறது. 
 
இதில் முஸ்லிம்களும், இலங்கை தமிழர்களும் புறக்கணிக்கப்பட்டதால் இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைப்பெற்றது. இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் பேசிய அமிதஷா, குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து தவறாக கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றனர். 
 
குடியுரிமை சட்ட திருத்தத்தை எக்காரணத்திற்காகவும் வாபஸ் பெற முடியாது. இதற்காக போராடுபவர்கள் தொடர்ந்து போராடலாம் போராடிக்கொண்டே இருக்கலாம் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்