ரஜினி வீட்டை முற்றுகையிடும் போராட்டம்! – போலீஸார் குவிப்பு!

Webdunia
புதன், 22 ஜனவரி 2020 (12:17 IST)
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு ரஜினி மன்னிப்பு கேட்காததை தொடர்ந்து பெரியார் திராவிட கட்சியினர் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

துக்ளக் 50வது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆதாரமற்ற பேச்சுக்கு ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என பெரியாரிய அமைப்புகள் கோரிய நிலையில் இதுகுறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளன.

இந்நிலையில் தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும், மன்னிப்பு கேட்க முடியாது எனவும் ரஜினிகாந்த் கூறியிருந்தார். மன்னிப்பு கேட்காவிட்டால் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக பெரியார் திராவிட கழகத்தினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று ரஜினியின் வீடு உள்ள போயஸ் கார்டன் பகுதிக்குள் நுழைந்த பெரியார் திராவிட கழகத்தினர் அங்குள்ள செம்மொழி பூங்கா அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரஜினி வீடு மற்றும் போயஸ் கார்டன் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட போலீஸ்க்காரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்