3 ஆயிரம் லட்டுகளை வைத்து “லட்டு விநாயகர்” – மண்சிற்ப கலைஞர் அதச்சல் சிற்பம்!

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2022 (09:58 IST)
இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் லட்டுகளை வைத்தே விநாயகர் செய்து அசத்தியுள்ளார் மண்சிற்ப கலைஞர்.

இன்று இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாடெங்கும் பல பொது இடங்கள், கோவில்கள், தெருக்களில் பெரிய பெரிய அளவில், வித்தியாச வித்தியாசமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகின்றன.

மக்கள் கையடக்கமாக சிறிய விநாயகர் சிலைகளை வீடுகளுக்கு ஆர்வத்துடன் வாங்கி சென்று பூஜை செய்து வருகின்றனர். இந்த ஆண்டு ஜெயிலர் விநாயகர், புஷ்பராஜ் விநாயகர், ஆர் ஆர் ஆர் விநாயகர் என சினிமா ஸ்டைல் விநாயகர்களும் வைரலாகியுள்ளன.

இந்நிலையில் ஒடிசாவின் புகழ்பெற்ற மணல்சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் விநாயகர் சிற்பம் ஒன்றை அமைத்துள்ளார். மணலால் அமைக்கப்பட்ட இந்த சிற்பத்தை 3,425 லட்டுகளை பயன்படுத்தி அலங்கரித்துள்ளார். இந்த லட்டு விநாயகர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்