கேரளாவில் இன்று ஒரேநாளில் 41 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

வெள்ளி, 21 ஜனவரி 2022 (19:28 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,668 என்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது 
 
மேலும் கேரளாவில் கூறுவதற்கு தற்போது 2.23 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசின் சுகாதாரத்துறை அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
கேரளாவில் 41,000 க்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிப்பு என்ற தகவலால் மாநில மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்