இந்தியாவை தாண்டி வங்கதேசம் வரை ரீச் ஆன தவெக மாநாடு! - விஜய்க்கு இவ்வளவு ஆதரவா?

Prasanth K

ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2025 (09:27 IST)

மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாடு நாட்டை கடந்து வங்கதேசம் வரை சென்றடைந்து வைரலாகியுள்ளது.

 

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக கட்சியின் இரண்டாவது மாநாட்டை நடத்தினார். விக்கிரவாண்டியை போலவே ஏராளமான தொண்டர்கள் மதுரையிலும் குவிந்தனர். சுமார் 14 லட்சம் பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இந்நிலையில் இந்த மாநாட்டின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக வைரலாகி வருகிறது. முக்கியமாக இந்தியா தாண்டி வங்கதேசத்தை சேர்ந்த பல சோஷியல் மீடியா பக்கங்களிலும் இந்த வீடியோ வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருவதுடன், கமெண்டில் பலரும் விஜய்க்கு ஆதரவாக பதிவுகளை இட்டு வருகின்றனர்.

 

அதில் பெரும்பாலான கமெண்டுகள் விஜய்யின் பாஜக எதிர்ப்பை ஆதரித்தே இருக்கின்றன. மதுரை மாநாட்டில் தங்கள் கொள்கை எதிரி பாஜக மட்டும்தான் என்றும், மதவாத பிளவு சக்தி என்றும் விஜய் தாக்கி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு வங்கதேசத்தில் கிடைத்துள்ள இந்த ஆதரவு தவெக தொண்டர்களை ஆச்சர்யத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்