பிரியங்கா மோகனுக்கு உறுதியளித்த டாக்டர் இயக்குனர்!

வெள்ளி, 21 ஜனவரி 2022 (16:01 IST)
நடிகை பிரியங்கா மோகன் டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிஸியான நடிகையாக வலம் வர ஆரம்பித்துள்ளார்.

டாக்டர் படத்தின் வெற்றியில் நடிகை பிரியங்கா மோகனின் துறுதுறுப்பான நடிப்பும் ஒரு முக்கியக் காரணம். அந்த படத்தில் அவரின் நடிப்பால் கவரப்பட்ட சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படமான டான் படத்திலும் வாய்ப்புக் கொடுத்தார். அதே சூர்யாவின் எதற்கு துணிந்தவன் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் நெல்சன் அடுத்து ரஜினி படத்தை இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் அந்த படத்தில் பிரியங்கா மோகனுக்கு வாய்ப்புக் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளாராம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்