மதுக்கடைகள் திறக்கலாம், பள்ளிகள் திறக்கக்கூடாதா? தனியார் பள்ளி நிர்வாகிகள் கேள்வி!

வெள்ளி, 21 ஜனவரி 2022 (17:55 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பின் போது மதுக்கடைகள், திரையரங்குகள் திறக்கலாம் ஆனால் பள்ளிகள் மட்டும் திறக்கக் கூடாதா? என தனியார் பள்ளி சங்கங்கள் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதை சுட்டிக்காட்டிய தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிர்வாகிகள் தமிழகத்தில் மதுக் கடைகள், ஜவுளிக்கடைகள், திரையரங்குகள் உள்பட அனைத்தும் திறந்த நிலையில் மாணவர்களுக்கு கல்வியை போதிக்கும் பள்ளிகளை மட்டும் ஏன் மூட வேண்டும் என கேள்வி எழுப்பி உள்ளனர் 
 
இது குறித்த மனுவை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் அளித்துள்ளதாகவும் விரைவில் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் தனியார் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்