ஒமிக்ரான் பரவலின் பொதுவான அறிகுறிகள் என்னென்ன??

வெள்ளி, 21 ஜனவரி 2022 (16:05 IST)
கொரோனா மூன்றாம் அலையான ஒமைக்ரான் பரவலின் போது ஏற்படக்கூடிய பொதுவான ஐந்து அறிகுறிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியது. கடந்த மாதத்தில் 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் தற்போது மீண்டும் மிக வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. 
 
அதிலும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, மேற்குவங்கம், உத்தர பிரதேசம், குஜராத், ஒடிசா, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. கொரோனா 2வது அலையை ஒப்பிடும்போது மூன்றாவது அலையில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. 
 
கொரோனா மூன்றாம் அலையான ஒமிக்ரான் பரவலின் போது ஏற்படக்கூடிய பொதுவான ஐந்து அறிகுறிகளை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. உடல் நடுக்கம் அல்லது நடுக்கமற்ற காய்ச்சல், இருமல், தொண்டையில் எரிச்சல், தசை பலவீனம் மற்றும் சோர்வு ஆகிய 5 பொதுவான அறிகுறிகள் கொரோனா மூன்றாம் அலையில் காணப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்