உல்லாசத்திற்கு மயங்கி வலையில் சிக்கிய முதியவர்! ரூ.27 லட்சம் அபேஸ்! – கேரளாவில் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (11:34 IST)
கேரளாவில் முதியவர் ஒருவரை ஆசை வலையில் வீழ்த்தி இளம்பெண் ஒருவர் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாவட்டம் குன்னம்குளம் பகுதியை சேர்ந்த நிஷாத் என்பவரின் மனைவி ரஷிதா. இவர்கள் இருவரும் சமூக வலைதளங்கள் மூலமாக அதிக பணம் உள்ள முதியவர்களை குறிவைத்து ஆசைக்காட்டி பேசி வந்ததாக கூறப்படுகிறது.

அப்படியாக இவர்கள் வீசிய உல்லாச ஆசை வலையில் 68 வயது முதியவர் ஒருவர் சிக்கியுள்ளார். அவருடன் சாட் செய்த ரஷிதா அவர் ஆசையை தூண்டி நேரில் வந்தால் உல்லாசமாக இருக்கலாம் என கூறியுள்ளார். அவரிடம் மயங்கிய முதியவரும் ரஷிதா வீட்டிற்கு சென்றுள்ளார். ரஷிதாவும், முதியவரும் உல்லாசமாக இருந்ததை நிஷாத் வீடியோ எடுத்துள்ளார்.

ALSO READ: இந்தியாவிலிருந்து வெளியேறும் ‘அமேசான்’ நிறுவன பிரிவு? அதிர்ச்சி அறிவிப்பு!

பின்னர் அதை காட்டி மிரட்டிய அந்த தம்பதியினர் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். முதியவரும் தன் வங்கி கணக்கில் இருந்து அடிக்கடி பணத்தை அவர்களுக்கு அனுப்பி வந்துள்ளார். முதியவரின் வங்கி கணக்கில் பணம் குறைவதை அறிந்த உறவினர்கள் அவரிடம் விசாரிக்க தான் இவ்வாறு சிக்கிக் கொண்டிருப்பதை அவர் கூறியுள்ளார்.

அதன்பேரில் போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மோசடி தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதியவரிடம் இருந்து ரூ.27 லட்சத்தை அவர்கள் மிரட்டி பெற்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்