உலகம் நாகரீகம் அடைந்து, அதன் உச்சத்தில் இருக்கும் இந்த நவீன காலத்திலும் மரண தண்டனைக்கு எதிராக சமூக ஆர்வலர்களும், மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்து குரல் விடுத்து வருகின்றன.
இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடான, சவூதி அரேபியாவில் முகமது பின் சல்மான் அன் சவுத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது, இங்கு கடந்த 10 நாட்களில், போதைப்பொருட்கள் தொடர்பான குற்றசம்பவங்களில் ஈடுபட்ட 12 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஐ நா அமைப்பு எதிர்ப்பு இது வருந்தத்தக்க நிகழ்வு என்று தெரிவித்து, மரண தண்டனைக்கு தடை விதிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.