தமிழகத்தில் ஆதரவு, கேரளாவில் எதிர்ப்பு: ராகுல் பயணத்தில் கம்யூனிஸ்ட்கள் இரட்டை வேடமா?

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (20:53 IST)
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்திற்கு தமிழகத்தில் ஆதரவு தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சி, கேரள மாநிலத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிரெதிர் கட்சிகளாக  உள்ளன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் தமிழகத்தில் ஆரம்பித்த போது  அதற்கு தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர் 
 
ஆனால் இந்த ஒற்றுமை பயணத்திற்கு கேரளாவில் ஆளும் கட்சியான இடதுசாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இடதுசாரிகள் ஆளும் கேரளாவில் 18 நாட்கள் ஒற்றுமைப் பயணம் செய்யும் ராகுல் காந்தி, பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே செல்கிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை எதிர்த்து வித்தியாசமான யுத்தமாக இது இருக்கிறது என கேரள கம்யூனிஸ்ட் கட்சி ராகுல் காந்தியின் பயணம் குறித்து விமர்சனம் செய்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்