செப்டம்பர் 14ம் தேதி ஹிந்தி தினம்; முதல்வர் அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (20:47 IST)
வட மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14ஆம் தேதி ஹிந்தி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் தென் மாநிலங்களில் எந்த மாநிலத்திலும் ஹிந்தி தினம் கொண்டாடப் படுவதில்லை. குறிப்பாக தமிழ்நாடு உள்பட ஒருசில மாநிலங்களில் இந்தி எதிர்ப்பு தினத்தை கொண்டாடி வருகின்றனர் 
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் செப்டம்பர் 14ஆம் தேதி ஹிந்தி தினம் கொண்டாடப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு அம்மாநிலத்தின் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன 
 
குறிப்பாக கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கர்நாடக மக்களின் வரிப்பணத்தில் ஹிந்தி தினத்தை கொண்டாடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என அறிக்கை வெளியிட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இதனை அடுத்து ஹிந்தி தினம் கொண்டாடப்படுமா அல்லது எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் கைவிடப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்