காங்கிரஸ் மாநில கட்சிகளுக்கு வழிவிட வேண்டும்: தேஜஸ்வி யாதவ்

திங்கள், 12 செப்டம்பர் 2022 (10:00 IST)
பீகாரில் இருப்பது போல் காங்கிரஸ் கட்சியின் மாநில கட்சிகளுக்கு வழிவிட வேண்டும் என துணை முதலமைச்சர் தேஜஸ்வி ஆதரவு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தினையும் பாதுகாக்க பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே கூட்டணியில் இணைய வேண்டும் என பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்
 
மேலும் மாநில கட்சிகள் பலமாக இருக்கும் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அவர்களுக்கு வழிவிட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
 
பீகாரில் அமைந்துள்ள மெகா கூட்டணி போல நாடு முழுவதும் உருவாக்க வேண்டும் என்றும் 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் செய்த தவறை 2024 ஆம் ஆண்டு மீண்டும் எதிர்க்கட்சிகள் செய்யக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார் 
 
பீகார் துணை முதலமைச்சர் வேண்டுகோளின்படி மாநில கட்சிகள் பலமாக இருக்கும் மாநிலங்களில் காங்கிரஸ் வழிவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்