கேரளாவில் 13 ஆயிரம் வாத்துகள் இறப்பு; மீண்டும் தலைதூக்கும் பறவை காய்ச்சல்!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (11:06 IST)
கேரளாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் பறவை காய்ச்சல் மீண்டும் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் பல்வேறு கோழி மற்றும் வாத்துப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அங்குள்ள வாத்து பண்ணை ஒன்றில் 13 ஆயிரத்திற்கும் அதிகமான வாத்துகள் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இறந்த வாத்துகளின் மாதிரிகளை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் இருந்தது உறுதியாகியுள்ளது. இறந்த வாத்துகள் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளன. மேலும் மற்ற பண்ணைகளிலும் சோதனை நடத்தி பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ள பறவைகளை உடனடியாக புதைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ஆலப்புழா மாவட்டத்தின் சம்பக்குளம், நெடுமுடி, முட்டார், வியாபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த பகுதிகளில் சில கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மக்கள் வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்