ஸ்டார் ஹோட்டல், பப்புகள் நள்ளிரவு 1 மணி வரை செயல்பட அனுமதி. அரசின் அறிவிப்பு..!

Mahendran
வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (11:55 IST)
கர்நாடக மாநில  ஸ்டார் ஹோட்டல்களில் உள்ள மதுபான விடுதிகள், பப்புகள் ஆகியவை நள்ளிரவு ஒரு மணி வரை செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.

தற்போது இரவு 10 மணி வரை மட்டுமே உணவு விடுதிகள் கடைகள் செயல்பட வேண்டும் என்று கட்டுப்பாடு இருக்கும் நிலையில் தொழில் வளர்ச்சியை அதிகரிப்பதன் காரணமாக தற்போது இரவு நேரங்களிலும் பணிகள் நடைபெற்று வருவதால் உணவு விடுதிகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் தொழில்கள் அதிகம் உள்ள பெங்களூரு நகரத்தில் இரவு நேரத்திலும் பலர் பணிபுரிந்து வரும் நிலையில் அம்மாநில இளைஞர்களுக்கு பெங்களூர் என்றாலே சொர்க்கமாக உள்ளது

அந்த வகையில் பெங்களூரில் உள்ள முக்கிய சாலைகளில் மதுபான கடைகள், மதுபான விடுதிகள், கேளிக்கை விடுதிகள் ஆகியவை ஏராளமாக இருக்கும் நிலையில் இங்கு தினமும் இரவு நேரத்தில் மதுபான கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பெங்களூரில் இரவு ஒரு மணி வரை மதுபான விடுதி திறந்து வைக்க அனுமதி அளித்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே 11 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக இரண்டு மணி நேரம் நீடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மதுபானம் விற்பனை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் மதுபான பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஆனால் கர்நாடக அரசின் இந்த உத்தரவுக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்