கர்நாடகாவில் குடிதண்ணீர் கூட இல்லை! – பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் கடிதம்!

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (14:27 IST)
தமிழ்நாட்டிற்கு விவசாய பயன்பாட்டிற்கு கர்நாடகா தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடா தற்போதைய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.



காவிரி மேலாண்மை வாரிய பரிந்துரையின்படி கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு விவசாய பயன்பாட்டிற்காக தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட குறைவான அளவு தண்ணீரை கர்நாடகா திறந்து விட்டதுடன் மேற்கொண்டு தண்ணீர் திறந்து விடுவதிலும் பிரச்சினைகள் எழுந்துள்ளது.

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கூடாது என கன்னட நடிகர்களும், கன்னட அமைப்புகள் பலவும் குரல் கொடுத்து வருவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடா தற்போதைய பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் காவிரி அணைகளில் உள்ள நீர் கொள்ளளவு குறித்து நிபுணர்கள் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடகாவில் குடிநீர் மற்றும் பாசனத்திற்கே தேவையான அளவு நீர் இருப்பு இல்லை என்றும், வறட்சிக்கால முறைப்படியே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்