தமிழ்நாட்டிற்கு தினமும் 5000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு பிறப்பித்து உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்றும், எக்காரணம் கொண்டும் கர்நாடக அரசு தண்ணீரை திறக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் விவசாயிகள் மீதும், பெங்களூரு மக்கள் மீதும் அக்கறை இருந்தால் அரசு தண்ணீரை திறந்து விட்டிருக்காது என்றும், பெங்களூரு மக்களின் மௌனம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும், அண்டை மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்து நம்முடைய நிலம், நீர், பொருளாதாரத்தை பயன்படுத்தி வசதியாக இருப்பவர்கள் கூட காவிரிக்காக குரல் எழுப்பவில்லை என்றும் அவர் கூறினார்.