துப்பாக்கியை சுத்தம் செய்தபோது மார்பில் பாய்ந்த குண்டு: மருத்துவமனையில் டிஜிபி அனுமதி!

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (08:13 IST)
துப்பாக்கியை சுத்தம் செய்தபோது மார்பில் பாய்ந்த குண்டு
கர்நாடக மாநில டிஜிபி ஒருவர் தனது துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது தவறுதலாக தனக்குத்தானே சுட்டுக்கொண்டதால் அவருடைய மார்பில் குண்டு பாய்ந்தது 
 
கர்நாடக மாநில வீட்டு வசதி வாரிய டிஜிபியாக இருப்பவர் ஆர்பி சர்மா. 59 வயதான இவர் இன்னும் ஒரு சில மாதங்களில் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று இவர் தன்னுடைய வீட்டில் கைத்துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது திடீரென அவருடைய விரல் விசையை அழுத்தியதால் அதிலிருந்து வெளியேறிய குண்டு மார்பில் பாய்ந்தது
 
இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் அவரை பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் மார்பில் பாய்ந்த குண்டு வெளியே எடுக்கப்பட்டதாகும் அவருடைய உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
இதுகுறித்து பெங்களூர் காவல் ஆணையர் விசாரணை செய்த போது தவறுதலாக தானே சுட்டுக் கொண்டதாக ஆர்பி சர்மா அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்