தமிழ்நாட்டில் மத மோதலை ஏற்படுத்தவே ஆர்.என்.ரவியை பாஜக அனுப்பியுள்ளது: கபில் சிபல்

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (15:09 IST)
தமிழ்நாட்டில் மத மோதலை ஏற்படுத்தவே ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக அனுப்பியுள்ளது என உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
 
ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தெரியுமா? பல ஆண்டுகளாக அமைதிப் பூங்காவாக திகழும் தமிழ்நாட்டில் மத மோதல், மதவாத அரசியல் இருந்தது இல்லை
 
தமிழ்நாட்டிலிருந்து மடாதிபதிகளை அழைத்துச் சென்று, தமிழ்நாட்டில் விஷ வித்துகளை விதைக்க திட்டமிடுகிறார்கள். ஆளுநர் அரசியலில் ஈடுபடலாம் என அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறதா?
 
தமிழ்நாட்டில் மதவாத அரசியலை முன்னெடுப்பதுதான் ஆளுநரின் வேலையா? பிரதமர், அமித்ஷா ஆகியோரின் அரசியல் திட்டத்தையே தமிழ்நாட்டில் ஆளுநர் முன்னெடுத்துச் செல்கிறார்
 
தமிழ்நாட்டில் மத மோதலை ஏற்படுத்தவே ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக அனுப்பியுள்ளது. ஆளுநரின் செயல்பாடுகளுக்கு பிரதமரும், அமித்ஷாவும் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என கூறியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்