இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் வெற்றி பெற்றார் நடிகை கங்கனா!

vinoth
செவ்வாய், 4 ஜூன் 2024 (15:51 IST)
சர்ச்சை நாயகியான கங்கனா ரனாவத் சமீபகாலமாக நடித்த எந்தவொரு படங்களும் வெற்றி பெறவில்லை. அதற்குக் காரணம் அவரின் பாஜக ஆதரவு நிலைதான் காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்டார். அவரின் சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் அவர் வேட்பாளராகக் களம் கண்டார்.

தேர்தலில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் தான் நடிக்கும் திரைப்படங்களின் ஷூட்டிங்கைக் கூட தள்ளிவைத்தார். இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங்கை விட சுமார் 80000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் அவர் மக்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைக்கவுள்ளார். இனிமேல் அவர் தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்