கடவுளே நிலைகுலைந்து விட்டதைப் போல உணர்ந்தேன்.. சத்குரு உடல்நலம் குறித்து கங்கனா ரனாவத்..!

Mahendran
வியாழன், 21 மார்ச் 2024 (14:01 IST)
சத்குரு ஜக்கி வாசுதேவ் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று பிரதமர் மோடி உள்பட பல வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நடிகை கங்கனா ரனாவத் சத்குரு உடல்நிலை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கடவுளே நிலைகுலைந்து விட்டது போல் உணர்ந்தேன் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
சத்குரு ஜக்கி வாசுதேவ் உடல்நிலை குறித்து அறிந்ததில் இருந்து நான் உணர்ச்சியற்றவளாக இருக்கிறேன். இந்த வலியுடன் சத்குரு அவர்கள், பிரம்மாண்டமான சிவராத்திரி நிகழ்வை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் எந்தவொரு கூட்டத்தையும், சந்திப்பையும் கூட தவிர்க்கவில்லை. அவர் விரைவில் குணமடைவார். நீங்கள் இல்லாமல் நாங்கள் ஒன்றுமில்லை; என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும் இன்ன்னொரு பதிவில், ’இன்று சத்குரு அவர்கள் ஐசியூ படுக்கையில் இருப்பதை பார்த்த போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதற்கு முன் அவரும் நம்மைப் போல் எலும்பு, ரத்தம், சதை கொண்ட ஒரு மனிதன் என்று எனக்கு தோன்றியதே இல்லை. கடவுளே நிலைகுலைந்து விட்டதை போல உணர்ந்தேன், பூமி இடம்பெயர்ந்து விட்டதைப் போலவும், வானம் என்னை கைவிட்டுவிட்டதைப் போலவும் உணர்ந்தேன், என் தலை சுற்றுவதை போல உணர்கிறேன்’ என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்