கைது விவகாரம் ; ஜனாதிபதியை சந்திக்கும் நீதிபதி கர்ணன்

Webdunia
வியாழன், 11 மே 2017 (14:04 IST)
தன்னை  கைது செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது தொடர்பாக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்க உள்ளதாக கூறியுள்ளார்.


 

 
சர்ச்சைக்குரிய உத்தரவுகளை பிறப்பித்ததாக கூறி, கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனை கைது செய்து ஆறு மாதம் சிறையில் அடைக்க உச்சநீதிமன்றம் நேற்று முன் தினம் உத்தரவிட்டது. 
 
எனவே, நேற்று நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் சென்னை வந்தனர். ஆனால் சென்னையில் உள்ள அவரது க்ரீன்வேஸ் வீட்டில் அவர் இல்லை. எனவே அவர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பி என்றனர். எனவே, கைதிலிருந்து தப்பிக்க அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்டது.
 
ஆனால், அவர் எங்கும் தப்பி செல்லவில்லை. சென்னையில்தான் இருக்கிறார் என அவரின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
அந்த மனுவில், நீதிபதி கர்ணணை கைது செய்ய நீதிமன்றம் இட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அவர் எங்கும் தப்பிசெல்லவில்லை. சென்னையில்தான் இருக்கிறார். நீதிபதிகள் உத்தரவு தொடர்பாக அவர் விரைவில் ஜனாதிபதியை சந்திக்க உள்ளார். எனவே, அவருக்கு விதிக்கப்பட்ட ஆறு மாத சிறை தண்டனையை திரும்ப பெற வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்