விவசாயிகள் பேரை சொல்லி அடிச்சு நொறுக்கிட்டாங்க! – செல்போன டவர் சேதம்; ரிலையன்ஸ் ஜியோ வழக்கு!

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2021 (11:28 IST)
பஞ்சாபில் ஜியோ நெட்வொர்க் நிறுவனத்திற்கு சொந்தமான டவர்கள் சேதம் செய்யப்பட்டது குறித்து ஜியோ நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக இதுபோன்ற சட்டங்களை இயற்றுவதாக குற்றம் சாட்டி வரும் போராட்டக்காரர்கள் சிலர் கார்ப்பரேட் நிறுவனங்களின் உடைமைகளை நாசம் செய்து வருகின்றனர்.

இதனால் பஞ்சாபில் 1500க்கும் அதிகமான ஜியோ நெட்வொர்க் டவர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து தற்போது ஜியோ நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. ஆனால் அந்த வழக்கில் போராட்டக்காரர்களை குறிப்பிடாமல் தொழில் போட்டியாளர்கள் சிலர் தூண்டுதலின் பேரில் நபர்கள் சிலர் இதை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்