குஜராத் முழுவதும் 5ஜி சேவை.. ஜியோ அறிவிப்பு!

Webdunia
சனி, 26 நவம்பர் 2022 (18:56 IST)
இன்னும் ஒரு சில நாட்களில் குஜராத் மாநிலம் முழுவதும் 5ஜி சேவை அளிக்கப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
 
ஒருபக்கம் குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அரசியல் கட்சிகள் அடுக்கடுக்கான வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இன்னொரு பக்கம் நிறுவனம் குஜராத் மாநிலத்தில் உள்ள முப்பத்தி மூன்று மாவட்ட தலைநகரங்களிலும் 5ஜி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜியோ அறிவித்துள்ளது
 
இதன் மூலம் இந்தியாவிலேயே முதல் முறையாக 5ஜி சேவையை முழுமையாக பெற்ற மாநிலம் என்ற பெருமையை குஜராத் பெற உள்ளது என்றும் அறிவித்துள்ளது
 
 குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து ஜியோ நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்