குஜராத் மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்பு நேற்று வெளியானது என்பதும், அம்மாநிலத்திற்கு டிசம்பர் 1ஆம் தேதி மற்றும் 5ஆம் தேதி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் 8ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்த நிலையில், டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சியைப்கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி குஜராத் வெற்றி பெற தீவிர பிரச்சாரத்தி ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் தற்போது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், இத்தேர்தலில், பாஜகவுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையேதான் போட்டி இருக்கப் போகிறது. எனவே காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து உங்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம் என்று கெஜ்ரிவால் இன்றைய பிரசாரத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.