வெள்ளத்தின்போது 100 பேரை காப்பாற்றிய இளைஞருக்குக் நேர்ந்த பரிதாபம்

Webdunia
செவ்வாய், 2 அக்டோபர் 2018 (06:17 IST)
சமீபத்தில் ஏற்பட்ட கேரள வெள்ளத்தின்போது சுமார் 100 பேர்களை தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய ஜினிஷ் என்ற 24 வயது வாலிபர் நேற்று சாலை விபத்தில் பரிதாபமாக பலியானார்.

கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தின்போது மாத்யூ என்ற குடும்பத்தினர் 7 பேர் மொட்டை மாடியில் உயிரை கையில் பிடித்து கொண்டு இருந்தனர். அவர்களை காப்பாற்ற மீட்புப்படையினர்களால்கூட முடியவில்லை. ஆனால் ஜினிஷ் என்ற மீனவர் தனது நண்பரகளை அழைத்து சென்று தனது உயிரை பணயம் வைத்து 7 பேர்களையும் காப்பாற்றினார். குறிப்பாக 80 வயது மூதாட்டி ஒருவரை நாற்காலியுடன் கழுத்தளவு தண்ணீரில் அவர் தூக்கி வந்த புகைப்படம் வைரலானது.

இந்த நிலையில் வெள்ளத்தின்போது தனது வீட்டை இழந்ததால் தற்போது வாடகை வீட்டில் வசித்து வந்த ஜினிஷ் நேற்று சாலை விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார். 100 உயிர்களுக்கும் மேல் காப்பாற்றியபோது போகாத அவர் உயிர், ஒரு சாலை விபத்தில் போய்விட்டதை அறிந்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த இறுதிச் சடங்கின்போது, அவரால் காப்பாற்றப்பட்டவர்கள் பலரும் கலந்தகொண்டு தங்களின் இறுதி அஞ்சலியையும், கண்ணீரையும் செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்